Saturday, December 9, 2017

Potato Capsicum Broccoli kurma



Potato Capsicum Broccoli kurma

தேவையான பொருட்கள்:
உருளை கிழங்கு -1 
ப்ரோக்கோலி -1/4 
குடைமிளகாய்-2 
தக்காளி -2 
வெங்காயம் -2
பச்சை மிளகாய் -2
கறிவேப்பிலை 
கொத்தமல்லி
மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன் 
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன் 
கரம் மசாலா பொடி  - 1 டீஸ்பூன் 
உப்பு 

அரைப்பதற்கு -
தேங்காய் துருவியது - 3 டேபிள்ஸ்பூன் 
இஞ்சி பூண்டு- 2 டீஸ்பூன் 
பெருஞ்சீரகம்  - 1 டீஸ்பூன் 
முந்திரிப்பருப்பு - 5 அல்லது 6
கசகசா -1 டீஸ்பூன் 

தாளிப்பதற்க்கு -
பட்டை - 1துண்டு 
கிராம்பு -4
ஏலக்காய் -2
பிரியாணி இலை -1
பெருஞ்சீரகம்-1/2 டீஸ்பூன்  
அன்னாசிப்பூ -1
செய்முறை:

கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசிப்பூ, பெருஞ்சீரகம்   சேர்க்கவும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அவை நன்றாக வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். ப்ரோக்கோலியில் சிறிது மோர், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பிசறி வைக்கவும். அடுத்து தேங்காய் இஞ்சி பூண்டு முந்திரிப்பருப்பு கசகசா சேர்த்து அரைக்கவும் நன்றாக அரைந்ததும் பெருஞ்சீரகம் சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுதை இப்பொழுது சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கியவுடன் மஞ்சள் தூள், மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி  சேர்க்கவும். பிறகு உருளை கிழங்கு  மற்றும் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு  சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதி வந்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும். உருளை கிழங்கு வெந்ததும்  இறுதியாக பிசறி வாய்த்த ப்ரோக்கோலியும், வெட்டி வைத்த குடைமிளகாயும்  சேர்த்து மூன்று நிமிடம் கொதிக்க  விட்டு கொத்தமல்லி சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.