வாழைத்தண்டு தயிர் பச்சடி
தேவையான பொருட்கள்:
வாழைத்தண்டு - 1
தயிர் - 1 கப்
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி இலை
உப்பு
தாளிக்க:
கடுகு
உளுந்தம்பருப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை
அரைக்க:
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
தேவையான பொருட்கள்:
வாழைத்தண்டு - 1
தயிர் - 1 கப்
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி இலை
உப்பு
தாளிக்க:
கடுகு
உளுந்தம்பருப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை
அரைக்க:
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
வாழைத்தண்டைச் சுற்றி உள்ள நாரை நீக்கிவிட்டு வட்டமாக அரிந்து அரிசி களைந்த நீரில் போடவும். ஒவ்வொரு முறையும் அரியும் பொழுது தண்டைச் சுற்றி உள்ள நாரை நீக்கிவிட்டு அறியவும். பின்பு தயிரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சிறிது மோர் அல்லது நீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். அதில் வாழைத்தண்டு, பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கிப் போடவும். தேங்காய், பச்சைமிளகாய், சீரகம் ஆகியவற்றை கெட்டியாக அரைத்து அதில் சேர்க்கவும். உப்பு தேவையான அளவு சேர்க்கவும். பின்பு கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலையை தூவி விடவும்.


